பள்ளி வேன் விபத்து.. 13 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

by Editor / 09-07-2025 01:43:06pm
பள்ளி வேன் விபத்து.. 13 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உள்ளிட்ட 13 ரயில்வே ஊழியர்கள் விசாரணை குழு முன்பாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. செம்மங்குப்பத்தில், நேற்று (ஜூலை 8) பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
 

 

Tags :

Share via