விஜயுடன் இணைந்து பயணிப்பது கடினம் - சீமான்

நாதக சீமான் அளித்த பேட்டியில், “எங்கள் கொடியை, உறுப்பினர் அட்டை வாசகத்தை விஜய் எடுத்துக் கொண்டார். அவர் எங்களைப் பின்பற்றுவது மகிழ்ச்சி. தாம் முதல்வர் ஆகவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். அவர் தான் முதல்வர் வேட்பாளர். பெரியாரை ஏற்று அரசியல் செய்யும் விஜயுடன் இணைந்து பயணிப்பது கடினம். பரந்தூர் பற்றி விஜய் பேசுவது எனக்கு வலிமை சேர்க்கும். எங்களுக்கு யாரும் போட்டி இல்லை. எங்களுக்கும் மற்றவர்களுக்கும் வெகுதூரம் உள்ளது" என்றார்.
Tags :