காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

by Editor / 27-07-2022 03:07:17pm
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

 புதுச்சேரியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை  கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தபோது அவர் தப்பிக்க முயற்சி தவறி விழுந்ததில் கையில் முறிவு  ஏற்பட்டது. சன்னியாசிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த 19ம் தேதி கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது உறவினர் முகேஷ் என்பவரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான முகேஷ்  போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் சன்னியாசிகுப்பத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via