பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமெரிக்கா பயணம்..

by Staff / 19-11-2023 02:45:25pm
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமெரிக்கா பயணம்..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்க செல்ல உள்ளார். சமீபத்தில் அமெரிக்க குழு இந்தியா வந்திருந்தது. பா. ஜ. , தலைமை அலுவலகத்தில் இந்த குழு, தலைவர் களுடன் ஆலோசனை நடத்தியது. இந்திய அரசியல் நிலை, 2024 லோக்சபா தேர்தல் குறித்து அலசி ஆய்வதற்காக இந்த குழு வந்திருந்தது. பா. ஜ. , தரப்பிலிருந்து ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை, அமெரிக்கா அனுப்ப தீர்மானித்துள்ளார், கட்சியின் தேசிய தலைவர் நட்டா. வரும் லோக்சபா தேர்தலில், இந்தியாவின் நிலை எப்படி இருக்கும் என்பதை விளக்க, இந்த குழு அனுப்பப்படுகிறது. தென் மாநிலத்தை பற்றி பேசுவதற்காக, தமிழக பா. ஜ. , தலைவர் அண்ணாமலை மற்றும் கர்நாடக இளம் எம். பி. , தேஜஸ்வி சூர்யா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்; 'இவர்கள் இருவரையும் குழுவில் சேர்க்க வேண்டும்' என, நட்டாவிடம் பிரதமர் சொன்னாராம்.

 

Tags :

Share via

More stories