மேளதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர் கூடி கொண்டாடப்பட்ட மூதாட்டியின் 110-வது பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம், மேலப்பாட்டாக்குறிச்சி பகுதியை சேர்ந்த பூல்தேவர் என்பவரது மனைவியான வள்ளியம்மாள் என்பவருக்கு நேற்றைய தினம் 110 -வது பிறந்தநாள் விழாவானது வெகு விமர்சையாக ஊர் மக்கள் ஒன்று கூடி மேளதாளங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக, ஐந்து தலைமுறை வாரிசுகள் ஒன்றிணைந்து அதாவது மகன், மகள் .... பேத்தி, பேரன்... பூட்டன், பூட்டி ... ஓட்டன், ஓட்டி ... உள்ளிட்ட ஐந்து தலைமுறை வாரிசுகள் ஒன்றிணைந்து மூதாட்டி வள்ளியம்மாளுடன் சேர்ந்து கேக் வெட்டி அவரது பிறந்த நாள் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடிய நிலையில், முதியவர்கள் தமக்கு கிடைத்த பொக்கிஷம் எனவும், அவர்களை பாதுகாப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து இளைய தலைமுறைகள் பல்வேறு பாரம்பரியத்தை கற்றுக் கொள்ள முடியும் எனவும் வள்ளியம்மாளின் வாரிசுகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தள்ளாடும் வயதிலும் மூதாட்டி வள்ளியமாவை தாங்கள் ஒன்றிணைந்து பாதுகாத்து வரும் நிலையில், இதே போல் நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டில் உள்ள முதியவர்களை குறை கூறாமல் பாதுகாக்க வேண்டும் எனவும், அவர்களை முதியோர் காப்பகத்திற்கு அனுப்புவதன் மூலம் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷத்தை சிலர் இழக்கிறார்கள்.
ஆகவே, முதியோர்களை நமது தெய்வம் போல் கருதி அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் வள்ளியம்மாளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :