சிறுமி கடத்தல் போலீசார் விசாரணை

by Staff / 24-02-2023 12:10:40pm
சிறுமி கடத்தல் போலீசார் விசாரணை

தெடாவூர் பேரூராட்சி 3-வது வார்டு அக்ரஹாரம் தெரு வில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந் தார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவியின் படிப்பை பெற்றோர் நிறுத்தி விட்டனர். வீட்டில் இருந்த அந்த சிறுமி கடந்த 18-ந் தேதி திடீ ரென காணாமல் போய் விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில், மாணவியை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கெங் கவல்லி போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo