விருதுநகரில் கள ஆய்வு மேற்கொள்ள வந்த முதல்வர் "ரோட் ஷோ". 2 கி.மீ.துரவரை திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்ற மக்கள்.

by Editor / 09-11-2024 09:06:13pm
விருதுநகரில் கள ஆய்வு மேற்கொள்ள வந்த முதல்வர்

ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் திமுக கட்சி நிர்வாகிளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முதல் அல்லம்பட்டி வரை  "ரோட் ஷோ"வாக பொதுமக்களை சந்தித்தபடி செல்கிறார். சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மக்களை சந்திக்கும் முதல்வருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் திமுகவினர், மலர் தூவியும் கும்ப மரியாதை செய்து உற்சாகமாக வரவேற்றனர்.விருதுநகர் எஸ் எஸ் கே சரஸ்வதி கிராண்ட் மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
விருதுநகர் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஈர்க்கும் வகையில் பணி செய்ய வேண்டும் என்றும் இனிவரும் காலத்தில் இளைஞர்கள் தான் எதிர்கால விதைகள் என்றும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஈர்க்கும் வகையில் அனைவரும் பணியாற்றுங்கள் என முதலமைச்சர் அறிவித்து அறிவுரை வழங்கியுள்ளார்.ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும் எனவும்,விருதுநகரில் உள்ள ஏழு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

Tags : 2 கி.மீ.துரவரை திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்ற மக்கள்.

Share via

More stories