திமுக ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம்- ஆட்சியர் நடவடிக்கை

by Editor / 09-11-2024 09:16:51pm
திமுக ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம்- ஆட்சியர் நடவடிக்கை

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டி ஊராட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் முத்துமாலையம்மாள். இவர் மீது ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததால் அவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட முத்துமாலையம்மாளின் கணவர் மதிச்செல்வன் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கனவே இது போன்று முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அதிமுகவைச் சேர்ந்த ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடுத்தடுத்து 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : திமுக ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம்- ஆட்சியர் நடவடிக்கை

Share via