பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்ட சிறுமி.. பகீர் பின்னணி

by Staff / 06-03-2024 11:34:02am
பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்ட சிறுமி.. பகீர் பின்னணி

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு இடையே கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாருக்கு பயந்து சிறுமியின் உடலை கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். சிறுமியை கொன்ற கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த தம்பதியினரின் 9 வயதுடைய இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை மதியம் மாயமானார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மாணவி அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

Tags :

Share via

More stories