சத்துக்கள் நிறைந்த கம்பு பக்கோடா

சத்துக்கள் நிறைந்த தானியங்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான் "கம்பு". இந்த கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என எந்த வகையிலும் பக்குவப்படுத்தி சாப்பிடலாம். அதில் சிறந்த வகையில் நமக்கு நன்மை அளிக்கும் ஒன்று தான் கம்பு பகோடா. அதன் செய்முறை இதோ
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 3/4 கப்,
கடலை மாவு – 1/3 கப்,
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி,
மஞ்சத்தூள் – 1/4 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு,
சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
சூடான எண்ணெய் – 3 தேக்கரண்டி,
எண்ணெய் பொரிப்பதற்கு – 1 கப்.
மற்ற பொருட்கள்
வெங்காயம், (நீள) மெல்லிய துண்டுகளாக நறுக்கவும் – 2,
முட்டைகோஸ் மெல்லியதாக நறுக்கியது – ½ கப்,
பச்சை மிளகாய் – 2,3 (நறுக்கியது),
கறுவேப்பிலை, (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு,
கொத்தமல்லி தழை (நறுக்கியது) – சிறிதளவு.
செய்முறை
தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்காக எண்ணெயை மிதமான தீயில் சூடாக்க வேண்டும்.
அதிலிருந்து 3 தேக்கரண்டி சூடான எண்ணெயை மாவில் ஊற்றி பிசறி விட வேண்டும்.
இப்போது வெட்டி வைத்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைய வேண்டும்.
பின்பு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் பக்கோடா மாவை கிள்ளி போட்டு பொரிக்கவேண்டும்.
பின் சாரணியால் திருப்பி விட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
ஒரு தட்டில் எண்ணெய் உறிஞ்சும் தாளை பரப்பி வைத்து பொரித்ததை எடுத்து வைக்க வேண்டும்.
மொறுமொறுப்பான கம்பு பக்கோடா தயார்
Tags :