சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு...

by Editor / 20-11-2021 03:27:02pm
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு...

 

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அம்மாநில நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


56வது டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
லக்னோ காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ள 56வது டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் டிஜிபி-க்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.


சபரிமலை பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.
கேரள மாநிலம் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு சபரிமலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,976க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,976க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,622க்கும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தனியார் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை.
கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரசு காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

.
சென்னை - திருப்பதி இடையிலான தினசரி விரைவு ரயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4.30 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் தினசரி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


சிறைத்துறை மற்றும் காவல்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக சிறைத்துறை மற்றும் காவல்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.44.30 கோடியில் 270 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் , 6 உதவி சிறை அலுவலர்களுக்கான புதிய குடியிருப்பு வீடுகளையும் திறந்து வைத்துள்ளார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு'
மணலி புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பூண்டி ஏரியில் 23,500 கனஅடி திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணலி புதுநகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது.

வராக நதியில் திறக்கப்படும் நீரின் அளவு 20,400 கனஅடியாக குறைப்பு.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து வராக நதியில் திறக்கப்படும் நீரின் அளவு 20,400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. வீடூர் அணைக்கு வினாடிக்கு 18,700 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு - ரூ.1088 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
திருத்தணி முருகன் கோயிலில் 2 அர்ச்சகர்கள் சிசிடிவி கேமராவை அங்கவஸ்திரம் கொண்டு மறைத்த விவகாரம்.. சிசிடிவி கேமராவை மறைத்த இரு அர்ச்சகர்கள் பணியிடமாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது, இந்து சமய அறநிலையத்துறை.தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டல புதிய பேராயராக பர்னபாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

 

Tags :

Share via