மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழக அரசு தகவல்

டாஸ்மாக்கில் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கூடுதல் பனிச்சுமை ஏற்படுவதாக மனுவில் கூறப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களின் குறையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இவ்வழக்கு விசாரணை ஜூலை 1க்கு ஒத்தி வைக்கப்பட்டது
Tags :