ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்:முதலமைச்சர் வலியுறுத்தல்

ஜூலை 1 முதல் ரயில் பயண கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என கூறப்படும் நிலையில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். "பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடம் மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது. AC பெட்டிகளை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
Tags :