நாயை சுட முயன்ற போது சிறுவன் மீது பாய்ந்த குண்டு

செங்கல்பட்டு: கொக்கரந்தாங்கல் கிராமத்தில் தெருநாய் ஒன்று அடிபட்டு கஷ்டப்படுவதை பார்த்த வெங்கடேசன் (55) என்பவர் அதை கருணைக்கொலை செய்ய முடிவெடுத்து நரிக்குறவர் காலணியை சேர்ந்த சரத்குமார் (37) என்பவரை அணுகினார். தொடர்ந்து சரத்குமார் நாயை துப்பாக்கியால் சுட, குண்டு தவறுதலாக குறளரசன் என்ற சிறுவன் மீது பட்டதில் அவர் படுகாயமடைந்தார். சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் வெங்கடேசன், சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Tags :