ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

by Editor / 19-05-2025 04:34:09pm
ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆந்திர மாநில உளவுத்துறையுடன் இணைந்து தெலங்கானா மாநில உளவுத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிராஜ், ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீர் ஆகிய 2 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via