மே.22-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்

அரபிக்கடலில் மே.22-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, மே.22-ஆம் தேதி, அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். அதன்பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :