முன்னாள் முதல்வர் எடப்படியார் -முன்னாள் அமைச்சர்கள் கருப்பசாமிபாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் சொந்தஊரான திருத்தில் நடைபெறவுள்ளது.இதனைத்தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலமாக நெல்லைக்கு வந்தார்.அவரை நெல்லை அதிமுக பிரமுகர்கள் வரவேற்றனர்.இதனைத்தொடர்ந்து எடப்படியார் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி,உள்ளிட்டோருடன் சென்று கருப்பசாமிபாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Tags : முன்னாள் முதல்வர் எடப்படியார் -முன்னாள் அமைச்சர்கள் கருப்பசாமிபாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.