வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காததற்கு சோனியா கண்டனம்

by Staff / 31-10-2023 12:13:41pm
வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காததற்கு சோனியா கண்டனம்

இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் இடையிலான போரை நிறுத்தக் கோரிய ஐ.நா. தீா்மானம் மீதான பொது வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிா்த்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா். பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவா்களது அமைதியான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடாக உள்ளது. உரிய நீதி இல்லாமல் அமைதி கிடைக்காது. தண்ணீா், மின்சாரம், உணவு என எதுவும் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல, சா்வதேச விதிகளுக்கும் எதிரானது என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo