ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. துணை வேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எனவே அரசின் மசோதாக்களுக்கும், உத்தரவுகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளது.
Tags :