ஜன.21ல் திமுக இளைஞரணி மாநாடு - தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா

by Staff / 06-01-2024 12:29:27pm
ஜன.21ல் திமுக இளைஞரணி மாநாடு - தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா

திமுக இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'மிக்ஜாம்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், தேர்தல் குறித்த அறிவிப்புக்காக அரசியல் கட்சியினர் காத்திருக்கின்றனர். பொதுவாக மார்ச் மாதத்தில்தான் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்த முறை முன்கூட்டியே தேர்தலை நடத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் 21ஆம் தேதிக்கு முன்பே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால், திமுக இளைஞரணி மாநாடு ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories