பாலக்காடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு

by Editor / 25-07-2021 11:24:23am
பாலக்காடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் காஞ்சிரப்புழா அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது அதனால் பாரதப்புழா ஆற்றிலும் சாலியாரு ஆற்றிலும் ஓடும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஒரு வார காலமாக சாலியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாலக்காடு மாவட்ட பேரிடர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் வெள்ளம் வரக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் 3 நாட்களுக்கு பாலக்காடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இருட்டு குத்தி, வாணியம் புறா, சரி பாதி கும்ப் ஆலப்புழா ஆகிய பழங்குடியினர் வாழும் கிராமங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.

நிலம்பூர் அரிசி கிராமத்தில் உள்ள விதைப் பண்ணை ஆழியாறு வெள்ளத்திலும் சூழப்பட்டிருக்கிறது.

பழங்குடியினர் பயன்படுத்தும் மூங்கில் கட்டுமரங்களில் இப்பொழுது பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருட்டு குத்தி பழங்குடியினர் கிராமத்தில் இருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் ஒரு நோயாளியின் நவீன படகுகளில் மீட்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநில தீயணைப்புத் துறையின் உதவியுடன் இந்த மீட்பு பணி நடந்தது இரு பெண்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மலைச்சரிவுகளில் வசிப்போர் நிலச்சரிவு மலையிலிருந்து வரும் வெள்ளம் ஆகியவைகள் விஷயத்தில் உஷாராக இருக்கும்படி மாவட்ட பேரிடர் நிவாரண ஆணைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via