ராஜஸ்தான், சத்தீஸ்கரில் அமலாக்கத்துறை சோதனை

by Staff / 03-11-2023 12:55:56pm
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் அமலாக்கத்துறை சோதனை

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜல் ஜீவன் திட்டத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக ராஜஸ்தானில் சோதனை நடைபெறுகிறது. இதேபோல், சத்தீஸ்கரில் மகாதேவ் செயலி பெயரில் பணமோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ரூ.5 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவ.07, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

 

Tags :

Share via

More stories