கே.சி. வீரமணி மீது 76.75 கோடி ரூபாய் ஊழல் அறப்போர் இயக்கம். புகார்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது 76.75 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்ற புகாரை, ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளது அறப்போர் இயக்கம்.
சமீபத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.அவருக்கு எதிரான புகார்களை அறப்போர் இயக்கம்தான் வெளியிட்டு இருந்தது. இதன் அடிப்படையில்தான், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, வேலுமணி அந்த வழக்கில் ஏ-1 என்று சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் கே.சி.வீரமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் புகார் பதிவு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.எஸ்.பி.வேலுமணி, தனது சகோதரர் அன்பரசன் மற்றும் அ.தி.மு.கவின் `நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளரான சந்திரசேகருக்குச் சொந்தமான கே.சி.பி இன்ஜீனியர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்த நிறுவனத்தில் இன்னொரு இயக்குநராக உள்ள சந்திரபிரகாஷ், அவருக்கு நெருக்கமாக உள்ள சில நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியுள்ளனர் என்பதுதான், அறப்போர் இயக்க குற்றச்சாட்டு. அதில் குறிப்பிட்ட ஒவ்வொருவருக்கு எதிராகவும், ரெய்டுகள் நடைபெற்றன.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.65 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இன்று புகார் தெரிவித்துள்ளது. 2011 முதல் 2021ம் ஆண்டுக்கு இடைப்பட்ட அதாவது 10 வருடங்களில், வீரமணிக்கு, 43,06,27,147 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் ரூ.15,74,35,980 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் வசமாகியுள்ளது.
இதேபோல கே.ஏ.பழனி மற்றும் ஆர்.எஸ். கல்வி மற்றும் அறக்கட்டளை 92,21,593 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள், ஹோம் டிசைனர்ஸ் மற்றும் பேப்ரிகேட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் (ஹோட்டல் ஹில்ஸ்-ஒசூர்) 15,00,00,000, விபிஆர் ஹில் பிராப்பர்டிஸ், 7,10,00000 கோடி, திருப்பத்தூர் ஹோட்டல் ஹில்ஸ், 6,0000000 மதிப்புக்கு அசையா சொத்துக்கள், அகல்யா மற்றும் பத்மாசினி, 3,21,24,067 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் ரூ.15,90,700 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் ஆகியவற்றை புகார் பட்டியலில் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாணியம்பாடி எம்எல்ஏவாகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். ஆனால், இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அவருக்கு சீட் தரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த நிலோபர் கபில், கே.சி.வீரமணி, ஏலகிரியில் துரைமுருகனை சந்தித்து கான்ட்ராக்ட் ஒப்பந்தம் பற்றி பேசியிருந்தார்.
துரைமுருகன் ஜெயிப்பதற்காக காட்பாடியில் ராமுவுக்கு சீட்டு கொடுத்திருக்கிறார். அதற்கு கைமாறாக வீரமணிக்கு எதிராக தேவராஜுக்கு சீட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சரமாரியாக குற்றம்சாட்டியிருந்தார். இப்படி உட்கட்சிக்குள் பஞ்சாயத்துகளை எதிர்கொண்ட வீரமணிக்கு எதிராக இப்போது ஊழல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Tags :