தி.மு.க .தலைமையிலான இந்தியா கூட்டணி தடை இன்றி தொடரும் ..காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே .சி. வேணுகோபால்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே .சி. வேணுகோபால் சென்னை அமைந்தக்கரையில் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க .தலைமையிலான இந்தியா கூட்டணி தடை இன்றி தொடரும் .. கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது. மீறி பேசுவது கூட்டணியின் ஒற்றுமையை பாதிக்கும் என்பதால் அத்தகைய செயல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வேளை யாராவது கூட்டணி குறித்து பேசினால், அது அவர்களுடைய சொந்த கருத்துகளாக கருதப்படும் .கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமையுமா.. என்ற கேள்விக்கு உங்களுடைய யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Tags :


















