ஆணாக மாறிய பெண்.. குழந்தைக்கு தந்தையான அதிசயம்

by Staff / 20-01-2024 04:26:08pm
ஆணாக மாறிய பெண்.. குழந்தைக்கு தந்தையான அதிசயம்

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா சால்வே, மாநில காவல்துறையில் பெண் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது உடலில் மாற்றம் ஏற்பட்டு ஆணுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து 2018ம் ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அனுமதி அளித்தார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய இவர் லலித்குமார் சால்வே என்ற பெயரில் ஆண் காவலராக பணியைத்தொடர்ந்தார். இதனையடுத்து 2020ஆம் ஆண்டு சீமா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 15ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பெண்ணாக இருந்து ஆணாக மாறி குழந்தைக்கு தந்தையாகியுள்ள அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

 

Tags :

Share via

More stories