கால்பந்து போட்டி பார்வையாளர் மாடம் இடிந்து இதில் சுமார் 200 பேர் காயம்; 5 பேர் படுகாயம்
கேரள மாநிலம் மலப்புரம் பூங்கோட்டில் நேற்று இரவு நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மரக்கட்டைகளால் ஆன இருக்கை திடீர் என்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் மைதானத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
காளிகாவ்நகரில் அகில இந்திய 7-வது கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து சென்றுவந்த நிலையில் ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டை ரசிப்பதற்காக மைதானம் சுற்றிலும் மூங்கில் மற்றும் மர பலகைகளை கொண்டு இருக்கைகள் அமைத்துள்ளனர். முக்கியமான இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகள் நேற்று நடைபெற்றது.
இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர் போட்டிக்கு முன்னதாகவே மைதானத்துக்கு வந்துவிட்டனர். போட்டிகள் தொடங்கியது ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து ஆரவாரத்துடன் போட்டிகளை கண்டுகளித்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த கரவொலி எழுப்பிய நிலையில் திடீரென மைதானத்தில் பார்வையாளர்கள் இருந்த இருக்கைகள் சரிந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து உயர்கோபுர மின்விளக்குகளும் சரிந்து விழுந்தன.இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் காயம் அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் மலப்புரம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு காளிகாவ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : About 200 people were injured when a football match spectator pavilion collapsed; 5 people were injured