இந்த தேர்தல் 2 வது சுதந்திரப் போராட்டம் - பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் ...கனிமொழி

by Staff / 05-04-2024 12:10:12pm
இந்த தேர்தல் 2 வது சுதந்திரப் போராட்டம் -  பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் ...கனிமொழி

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சியினர் தங்களது மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி எம்.பி கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப் போல் இந்த தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via