அம்மா தானே எல்லாம். அன்னையர் தினக் கொண்டாட்டம்

by Staff / 08-05-2022 12:36:59pm
அம்மா தானே எல்லாம். அன்னையர் தினக் கொண்டாட்டம்

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது நிகரில்லாத தாயின் பெருமையை போற்றும் நாள் இந்த நாள் இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதற்காகவே தாயைப் படைத்தான் என்பது பழமொழி. விலங்குகள் பறவைகள் பூச்சிகள் எதுவும் தாயின் அன்புக்கு விதிவிலக்கல்ல தன் குஞ்சுக்கு தான் ஊட்டி கழிக்கும் பறவை கூட தெரியும் தாய்மை என்பது என்னவென்று. பத்து மாதம் மடி சுமந்து பெற்ற குழந்தையை உதிரத்தை பாலாக்கி இரவென்றும் பகலென்றும் பாராமல் தாளாற்றி தந்த போதும் குழந்தைகளுக்கு அமுதூட்டும் போதும் தாய்மை நிறைவுபெறுகிறது. திரைப்படங்களும் இலக்கியங்களும் தாயின் பெருமைகளை பட்டியலிட்டு சிறப்பித்துள்ளனர் தந்தையின் தாய்மை உணர்வு தாயுமானவன் என்று இலக்கியத்தில் போற்றப்படுகிறது. மனைவியின் மூலமும் ஆண் தாய்மையை பெறுகிறான் இந்த திருநாளில் தாயே போற்றி வணங்குவோம் மேன்மை பெறுவோம்.

 

Tags :

Share via

More stories