by Staff /
07-07-2023
02:21:32pm
வரலாறு காணாத வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.250-ஐ எட்டியுள்ளது. கங்கோத்ரி தாமில் தக்காளி கிலோ ரூ.250 ஆகவும், உத்தரகாசி மாவட்டத்தில் கிலோ ரூ.180 முதல் ரூ.200 ஆகவும் உள்ளது. இப்பகுதியில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதால், மக்கள் அவற்றை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் ரூ.100 முதல் 120 வரை விற்கப்படுகிறது. நியாயவிலைக் கடைகளில் ரூ.65 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தெலுங்கானா, ஆந்திராவில் கிலோ ரூ.150ஐ தாண்டியுள்ளது. அனல் காற்று மற்றும் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Tags :
Share via