by Staff /
07-07-2023
01:55:35pm
கோவை டிஐஜி விஜயகுமார் இன்று காலை தனது பாதுகாவலரிடம் துப்பாக்கியை வாங்கி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் இழப்பு வேதனை அளிக்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பதிவில், "இளம், புத்தி கூர்மைமிகு அதிகாரி விஜயகுமாரின் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைகிறேன். டிஐஜி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி" என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Tags :
Share via