28 வங்கிகளில் ரூ.22,000 கோடி கடன் மோசடி: ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

by Admin / 17-02-2022 05:04:44pm
28 வங்கிகளில் ரூ.22,000 கோடி கடன் மோசடி: ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

ஏபிஜி நிறுவனம், அதன் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் 28 வங்கிகளில் 22 ஆயிரத்து 842 கோடி ரூபாய் அளவு கடன் வாங்கி ஏமாற்றியதாக அன்மையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. 

இதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. பனமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணப் பதுக்கலுக்காக போலி நிறுவனங்களை உருவாக்கியது, கடனாக பெற்ற தொகையை வேறு பயன்பாடுகளுக்கு திருப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனத்திற்கு சொந்தமாக வெளிநாட்டில் செயல்படும் நிறுவனத்தில் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் சந்தானம் முத்துசுவாமி, இயக்குநர்கள் அஸ்வினி குமார், சுஷீல் குமார் அகர்வால் மற்றும் ரவி விமல் நிவேடியா ஆகியோரும் ஏபிஜி இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via