ஒருநபரால் மாணவி கொலை, மாணவியின் தந்தையும் அதிர்ச்சியில் பலி.
சென்னை ஆலந்துார், ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்த காவலர் மகளான சத்யாஸ்ரீ(20) என்ற கல்லூரி மாணவியும் இதே பகுதியில் வசித்துவந்த சிறப்பு உதவி ஆய்வாளரது மகன் சதீஷ்(23) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்லுாரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று தன் தோழியுடன் சத்யாஸ்ரீ காத்திருந்தார். அங்கு வந்த சதீஷ், சத்யாஸ்ரீயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த சதீஷ், அந்நேரம் தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்குள் வந்த மின்சார ரயிலில் சத்யாஸ்ரீயை தள்ளி விட்டுள்ளார். அதில் சிக்கிய சத்யாஸ்ரீ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தப்பியோடிய சதீஸ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் ஓடும் ரயில்முன் மகள் கொலை செய்யப்பட்டசம்பவத்தால் மாரடைப்பு ஏற்பட்டு சத்யாஸ்ரீயின் தந்தையான மாணிக்கம் இன்று அதிகாலை உயிரிழந்தார்.ஒரு நபரால் இருவர் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags : ரயில் நிலையத்தில் கொலை.













.jpg)





