வைரலான கடற்படை அதிகாரியின் கடைசி வீடியோ உண்மை அல்ல

by Editor / 24-04-2025 04:45:26pm
வைரலான கடற்படை அதிகாரியின் கடைசி வீடியோ உண்மை அல்ல

காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலும் ஒருவர். அவர் இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி வீடியோ என சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானது. ஆனால், யாஷிகா சர்மா மற்றும் ஆஷிஷ் செஹ்ராவத் என்ற தம்பதியினர் முன்வந்து, இந்த காணொளி தங்களுடையது என்றும், எந்த கடற்படை அதிகாரி மற்றும் அவரது மனைவியுடையது அல்ல என்றும் கூறியுள்ளனர்.
 

 

Tags :

Share via