அலறியடித்து ஓடிய செங்கோட்டையன்: ஈரோட்டில் பரபரப்பு

ஈரோட்டில் மே தின பேரணியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பேரணி துவங்கும் முன்பு, பலத்த காற்று வீசியதால் மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து அப்பகுதி முழுவதும் பறந்தது. இதனால், செங்கோட்டையன் உட்பட பலரும் தலையில் துண்டை போட்டு தேனீக்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொண்டனர். மேலும், செங்கோட்டையன் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடி தப்பித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :