கோர விபத்து - ஒரே குடும்பத்தில் 3 பேர் உடல் நசுங்கி பலி
கர்நாடகா: கலபுராகியில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், கோபூர் அருகே அஃபசல்பூர் பிரதான சாலையில் காரில் பயணித்த போது குறுக்கே வந்த நாய் மீது மோதுவதைத் தவிர்க்க சாலையோரத் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் ஆயிஷா (70), அஜ்மேரா (30) மற்றும் அஜ்மேராவின் மகள் ஜைனப் (2) ஆகியோர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.
Tags :



















