10 ஓவரில் பெங்களூர் அணியை வீழ்த்தி  கொல்கத்தா அபார வெற்றி

by Editor / 21-09-2021 03:49:59pm
10 ஓவரில் பெங்களூர் அணியை வீழ்த்தி  கொல்கத்தா அபார வெற்றி

 

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியை 10 ஓவரில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.


அபுதாபி ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திங்கள் இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்து படிக்கல் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். கோஹ்லி 5 ரன்னில் வெளியேற, பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து படிக்கல் ஸ்ரீகர் பாரத் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்தனர்.


படிக்கல் 22 ரன் எடுத்து (20 பந்து, 3 பவுண்டரி) பெர்குசன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் பிடிபட்டார். ஸ்ரீகர் 16 ரன் எடுத்து ரஸ்ஸல் பந்துவீச்சில் கில் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மேக்ஸ்வெல் (10 ரன்), வனிந்து ஹசரங்கா (0), சச்சின் பேபி (7 ரன்) ஆகியோர் வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பெங்களூர் அணி 66 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. கைல் ஜேமிசன் 4 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஹர்ஷல் 12, சிராஜ் 8 ரன்னில் வெளியேற, பெங்களூர் அணி 19 ஓவரில் 92 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சாஹல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் வருண், ரஸ்ஸல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பெர்குசன் 2, பிரசித் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத் ரன்களை குவித்தனர். பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் பலவழிகளில் முயன்றும் அவர்களின் கூட்டணியை உடைக்க முடியவில்லை கடைசியாக சுப்மன் கில் 48 (34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் களம் இறங்கினார்.

ஆனால் அவருக்கு எந்த சிரமம் கொடுக்காமல் வெங்கடேஷ் ஐயர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. வெங்கடேஷ் ஐயர் 41 ரன், ரசல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் பந்துவீச்சில் சாஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில்  நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

 

Tags :

Share via