"மோடிக்கு விடப்பட்ட அறைதான் இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் பரகலா பிரபாகர் பேட்டி

by Staff / 07-06-2024 03:17:20pm

மோடிக்கு விடப்பட்ட அறைதான் இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் என பொருளாதார நிபுணரும் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர், "மோடியின் கொள்கை, அரசாங்கம், பிரசாரம் ஆகியவற்றை ஏற்கவில்லை என மக்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர். என்டிஏ கூட்டணியின் பிரதமராக மோடி ஆகிறாரெனில், அவருடைய இயல்பு மாற வேண்டும். ஆனால் அது நடக்காது. ஆட்டுத்தோல் போர்த்திக்கொண்டு அதிக நாட்களுக்கு ஓநாயால் இருக்க முடியுமா? சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் மோடியை விட சாமர்த்தியமான, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள். புதிய அரசாங்கம் அதிக காலம் நீடிக்க முடியாது" என கூறியுள்ளார்.

 

Tags :

Share via