வேலை வாங்கித் தருவதாக கூறி 59 லட்சம் பணம் மோசடி

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஐம்பத்தி ஒன்பது லட்சம் ரூபாய் வரை பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது நண்பரான செல்வம் என்பவரிடம் அவர் மகனின் வேலையின்மை குறித்து தெரிவித்துள்ளார் இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனை இயக்குனரின் உதவியாளராக பணிபுரியும் மணிகண்டன் தனது நண்பர் என கூறி செல்வம் அறிமுகப்படுத்தியுள்ளார் .ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக கூறி பிரபாகரனிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ஐம்பத்தி ஒன்பது லட்ச ரூபாய் வரை மணிகண்டன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கித் தராமல் போலியான பணி நியமன ஆணை வழங்கி பணி தற்போது செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார் மணிகண்டன் கொடுத்த ஆவணம் போலியானது என தெரியவந்துள்ளது.
Tags :