லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது

தென்னிலை அருகே உள்ள செஞ்சேரிவலசு பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தென்னிலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த தென்னிலை கொடுமுடி ரோடு பகுதியைச் சேர்ந்த துருவன் வயது 72 என்ற முதியோரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :