850 கோடி ரூபாய் மதிப்புள்ள 200டன் கஞ்சா தீவைத்து அழிப்பு

by Editor / 12-02-2022 11:38:17pm
850 கோடி ரூபாய் மதிப்புள்ள 200டன் கஞ்சா தீவைத்து அழிப்பு

ஆந்திரா,மற்றும்  ஒரிசா மாநில மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவால் "ஆபரேஷன் பரிவர்த்தனா"  என்கின்ற சோதனைகள் மூலம் ஆந்திரா  மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சாவை அனகாபள்ளி அருகே உள்ள கோடூரில் அம்மாநில  டி,ஜி,பி தலைமையில் பல இடங்களில் இராட்சத குவியல்களை ஏற்படுத்தி காவல்துறையினர் தீவைத்து ஏரித்தனர்.தீவைத்து  அளிக்கப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 850 கோடி ரூபாய் எனக் கூறப்படுகின்றது. கடந்த ஒரு ஆண்டு காலத்தில் விசாகப்பட்டினத்தில் 7552 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்களை காவல்துறை அளித்ததாக கூறப்படுகிறது.

 

Tags : 850 கோடி ரூபாய் மதிப்புள்ள 200டன் கஞ்சா தீவைத்து அழிப்பு

Share via