12 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

by Staff / 08-10-2022 12:32:07pm
12 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை கனமழை தொடரும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via

More stories

Logo