தொகுதி மறுவரையறைக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு 39 இடங்களிலிருந்து 59 இடங்களாக அதிகரிக்கும்
பாராளுமன்றத்தில் மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தென் மாநிலங்களில் மொத்த இடங்கள் 129 இல் இருந்து 195 ஆக அதிகரிக்கும் என்றும் எதிர் கட்சிகள் பரப்பும் தகவல்கள் தவறானவை என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் 50 சதவீத இட அதிகரிப்பு மாதிரியின்கள் தென் மாநிலங்களுக்கான உத்தேச இடங்கள் தமிழ்நாடு 39 இடங்களிலிருந்து 59 இடங்களாக அதிகரிக்கும் என்றும் கேரளா 20 இடங்களிலிருந்து 30 இடங்களாக அதிகரிக்கும் என்றும் கர்நாடகா 28 இடங்களிலிருந்து 42 இடங்களாக உயரும் என்றும் ஆந்திர பிரதேசம் 25 இடங்களிலிருந்து 38 இடங்களாக உயரும் என்றும் தெலுங்கானா 17 இடங்களிலிருந்து 26 இடங்களாக உயரும் என்றும் தொகுதிமறுவரையறைக்கு பிறகு நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களில் ஒட்டுமொத்த பங்கீடு 23.76 சதவீதத்திலிருந்து சுமார் 23.90 சதவீதமாக உயரும் என்றும் எந்த மாநிலமும் தற்போதைய செல்வாக்கை இழக்காது என்றும் தெரிவித்தார்.
Tags :



















