மன்னர் ஆட்சி கோரி போராட்டம் : நேபாளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்து வந்தது. கடந்த 2008-ம் ஆண்டு அது முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீண்டும் மன்னராட்சி கோரி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களைக்கொண்டு போலீசாரை தாக்கினர். பதிலுக்கு, தடியால் அடித்தும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தினர்.இந்நிலையில், மீண்டும் போராட்டம் வெடிக்காமல் தடுக்கும் நோக்கில் காத்மாண்டுவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேபாளம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
Tags :