புறநகர் ரயிலில் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாமல் வந்த  2,177 பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதிமறுப்பு.

by Editor / 11-01-2022 10:18:25am
புறநகர் ரயிலில் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாமல் வந்த  2,177 பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதிமறுப்பு.

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கும் பயணிகள் 2 தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தாமல் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அத்துடன் இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஜனவரி 31ஆம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் 10ஆம் தேதியான நேற்று முதல் 
சென்னை புறநகர் ரயிலில் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாமல் வந்த  2,177 பயணிகளுக்கு பயணம் செய்ய நேற்று அனுமதி மறுக்கப்பட்டது,இந்த நிலையில் இன்றும் அதே சோதனைகள் நடந்துவருகின்றன.தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாத பயணிகளை ரயில்வே நிர்வாகத்தினர் திருப்பிஅனுப்பி வருகின்றனர்,மேலும் முகக்கவசம் அணியாமல் வந்த  31 நபர்களிடமிருந்து தலா 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கபட்டதில் 15 ஆயிரத்து 500  வசூலிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via