குழாயடி சண்டையில் பலியான பெண்

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் மனைவி முனியம்மாள் வயது 37. அதே தெருவை சார்ந்த சேர்ந்தவர் சாந்தி வயது 38. முனியம்மாள் வீட்டின் அருகே உள்ள தெருக்குழாயில் சாந்தியும் அவரது மகளும் தண்ணீர் பிடித்துவிட்டு குடங்களை முனியம்மாள் வீட்டின் வாசலில் வைத்தார்கள். அதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. வாய் தகராறு முற்றி கைகளப்பாக மாறியது.இதில் காயமடைந்த முனியம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று இரவே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். எனினும் அவர் சாந்தி உருட்டு கட்டையால் தாக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதால் எழுந்த புகாரை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிறகே அவரது மரணம் குறித்த மர்மம் விளங்கும். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :