திமுக நாடாளுமன்ற இரண்டு அவைகளுக்கும் குழு தலைவராக கனிமொழி நியமனம்.

by Editor / 10-06-2024 09:31:12pm
திமுக நாடாளுமன்ற இரண்டு அவைகளுக்கும் குழு தலைவராக கனிமொழி நியமனம்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி எம்.பியை நியமித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் திமுக மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர். பாலு இருந்த நிலையில், தற்போது கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.திமுக மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், திமுக மக்களவை கொறாடாவாக ஆ. ராசாவையும் நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திமுக நாடாளுமன்ற இரண்டு அவைகளுக்கும் குழு தலைவராக கனிமொழி நியமனம்.
 
Tags : குழு தலைவராக கனிமொழி நியமனம்.

Share via