யப்பா யாருப்பா கடையில பசிக்குது பலசரக்கு கடையில் உள்ள தின்பண்டங்களை எடுத்துச் சென்ற யானை.

by Editor / 10-06-2024 09:21:04pm
யப்பா யாருப்பா கடையில பசிக்குது பலசரக்கு கடையில் உள்ள தின்பண்டங்களை  எடுத்துச் சென்ற யானை.

 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட மூணாறு  அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் மற்றும் யானைகளின்  இருப்பிடமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அடிக்கடி யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து மக்கள் வசியக்கூடிய பகுதியில் உலா வருகிறது.

 அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை  வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 இந்த நிலையில் மூணாறு அருகே உள்ள சொக்க நாடு பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று தனியாக வந்து அப்பகுதியில் இருந்த பலசரக்கு கடையை உடைத்து உள்ளே இருந்த தின்பண்டங்களை எடுத்துச் சென்றது,  அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும் நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து இந்த யானைகளை விரட்ட அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


 

 

Tags : யப்பா யாருப்பாயா கடையில பசிக்குது பலசரக்கு கடையில் உள்ள தின்பண்டங்களை எடுத்துச் சென்ற யானை.

Share via