சென்னையின் 110 வது காவல் ஆணையரானார் அருண் ஐபிஎஸ்

சென்னையின் 110 வது காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விடுவிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சென்னையில் காவல் துணை ஆணையராக பதவி வகித்த அருண், திருச்சி மற்றும் மதுரையில் ஆணையராக பதவி வகித்தார். மேலும், ஆவடி மாநகரின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் அருண் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :