செல்போன் ஆப் மூலம் விபச்சாரம்  போலி பத்திரிகையாளர் உட்பட மூன்று பேர் கைது. 

by Editor / 04-10-2023 11:44:20pm
செல்போன் ஆப் மூலம் விபச்சாரம்  போலி பத்திரிகையாளர் உட்பட மூன்று பேர் கைது. 

திருப்பூர் வெள்ளியம்பாளையம் அருள்ஜோதி நகர் சேர்ந்த விக்னேசுவரன் இவர் புதிய மாற்றம்'' பத்திரிகையாளர் பிரஸ் ஐ.டி. அடையாள அட்டையை பயன்படுத்தி, வந்துள்ளார். மேலும் அவிநாசி கைகாட்டிப்புதூர் ஜல்லிமேடுதோட்டம் பாலமுருகன், சேலம் ஓமலூர் கள்ளிக்காடு அருண்குமார். இவர்கள் மூவரும் சேர்ந்து சேவூர் கருமாபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து செல்போன் ஆப் (lacanto) மூலம் இளம் பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்துசேவூர் போலீசாருக்குகிடைத்த ரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை செய்த பொழுது விபச்சாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது மேலும் இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போலி பத்திரிக்கையாளர் அடையாள அட்டை, நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இளம் பெண்ண அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 

Tags : செல்போன் ஆப் மூலம் விபச்சாரம்  போலி பத்திரிகையாளர் உட்பட மூன்று பேர் கைது. 

Share via

More stories

Logo