இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று அல்வா கிண்டியுள்ளார்கள் உதயநிதி ஸ்டாலின்

by Staff / 02-02-2024 12:40:46pm
இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று அல்வா கிண்டியுள்ளார்கள் உதயநிதி ஸ்டாலின்

 நேற்று காலை 11 மணி அளவில் மக்களவையில்இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் குறித்த தனது கருத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

, ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

. இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்

 ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி. என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories